வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திடீர் முடிவு ரூ.965 கோடி முதலீடு வாபஸ்

மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் மறுநாள் தேர்தல் முடிவுகள் வருவதன் எதிரொலியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 6 காசுகள் உயர்ந்தது. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு ரூ.69.72 ஆக இருந்தது. நேற்று வர்த்தகம் முடிவில் 6 காசுகள் மட்டும் அதிகரித்து ரூ.69.66 ஆக இருந்தது. டாலரின் மதிப்பு சர்வதேச சந்தையில் வலுவிழந்தது ரூபாய் மதிப்பு உயர சாதகமாக இருந்துள்ளது.

பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 0.46 சதவீதம் குறைந்து பேரலுக்கு 71.85 டாலராக இருந்தது. அதேநேரத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் திடீரென ரூ.965 கோடியை விலக்கிக் கொண்டது, அந்நிய செலாவணி வர்த்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தை உயர்ந்தாலும், தேர்தல் முடிவுக்கு முந்தைய நாள் முதலீடு வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: