அந்தமானில், நிலநடுக்கம்

புதுடெல்லி: அந்தமான்  நிகோபர் தீவுகளில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது.  வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் நிகோபர் தீவுகளில் நேற்று காலை 6 மணியளவில் மிதமான நிலநடுக்கம்  ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையம் 10 கிமீ ஆழத்தில் இருந்தது. இதனால்,  ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இதேபோன்று  நேற்று முன்தினம் நள்ளிரவு 12.9 மணிக்கும் அந்தமான் தீவுகளில் லேசான  நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.  இந்த நிலநடுக்கத்தால் எவ்வித உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை.

Tags : Atman ,earthquake , In Atman, earthquake
× RELATED காஷ்மீர், இமாச்சலில் திடீர் நிலநடுக்கம்