×

பிரதமர் மோடி பற்றி பேசியதற்காக ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா? ஜூன் 7ம் தேதி தீர்ப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் ஜூன் 7ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.  கடந்த 2016ம் ஆண்டில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ராணுவ வீரர்களின் ரத்தத்துக்கு பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொள்கிறார். அவர்களின் தியாகத்தை பயன்படுத்தி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்,’ என கடந்த 2016ல் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் பேசினார். பிரதமரை பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது பாஜ.வினர் புகார் அளித்தும் டெல்லி போலீசார்  நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி டெல்லி போலீசாருக்கு உத்தரவிடக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜோகிந்தர் துலி வழக்கு தொடுத்தார். இதைத் தொடர்ந்து, புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 15ம் தேதி நடவடிக்கை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். அதில், ‘பிரதமர் பற்றி ராகுல் அவதூறாக பேசியது உண்மை. எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்யலாம்’ என்று கூறியுள்ளனர்.  இந்த வழக்கில் ஜூன் 7ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று பெருநகர கூடுதல் தலைமை நீதிபதி உத்தெரிவித்தார்.

Tags : Modi ,Rahul , PM Modi, Speaking of Rahul, will the case be registered?
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...