காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம்  மாவட்டத்தில் உள்ள கோபால்போரா என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி  இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல்  வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.  இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில், 2  தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.  

அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள்  பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லப்பட்டவர்கள் எந்த  தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என விசாரணை நடக்கிறது.  இம்மாநிலத்தில் உள்ள  பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றபோது, தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது. இதில்  ராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்தார். 7 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

× RELATED ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம்