படிப்பதற்காக மும்பை வந்த பிரேசில் நாட்டு மாணவி பலாத்காரம்: 52 வயது ஆசாமி கைது

மும்பை: படிப்பதற்காக மும்பை வந்த பிரேசில் நாட்டு மாணவியை பலாத்காரம் செய்த 52 வயது நபரை போலீசார் கைது செய்தனர். தென் மும்பை, கபரேட் பகுதியில் வசித்து வருபவர் பத்மாகர் நந்தேகர் (52). அந்த பகுதி குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு பிரேசில் நாட்டைச் சேர்ந்த 19 வயது மாணவி, இளைஞர்கள் பரிமாற்றம் திட்டத்தின் ஒரு பகுதியாக மும்பைக்கு படிப்பதற்காக வந்தார். அவர் கபரேடு பகுதியில் பத்மாகருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில், பத்மாகர் கடந்த ஏப்ரல் 15ம் தேதி அந்த மாணவியை இரவு நேர உணவு சாப்பிடுவதற்காக ஓட்டல் ஒன்றுக்கு அழைத்தார்.

Advertising
Advertising

அங்கு அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவிக்கு கொடுத்துள்ளார். மயங்கிய நிலையில் மாணவி அங்குள்ள ஒரு அறைக்குச் சென்று படுத்துக் கொண்டார். மறுநாள் காலையில் எழுந்தபோது, தான் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை அந்த மாணவி உணர்ந்தார். இந்நிலையில், நடந்த சம்பவத்தை உள்ளூர் கார்டியனிடம் தெரிவித்தார். அவரது அறிவுரையின்பேரில் போலீசில் புகார் செய்தார்.  போலீசார் வழக்கு பதிந்து பத்மாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: