×

நடிகை பலாத்கார வழக்கு சிபிஐ விசாரணை கோரிய நடிகர் திலீப்பின் மனு தள்ளுபடி

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் சிபிஐ விசாரணைக் கோரி நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரபல  மலையாள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் கேரள  உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் தாக்கல் செய்த மனு நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது திலீப் சார்பில் ஆஜரான வக்கீல், நடிகை  பலாத்கார வழக்கில் திலீப்பிற்கு எந்த  தொடர்பும் இல்லை. போலீஸ் விசாரணையில்  திருப்தி இல்லை.

சிபிஐ விசாரித்தால் விசாரணை இல்லாமலேயே திலீப் விடுதலை  செய்யப்பட்டுவிடுவார். பத்திரிகைகள் தான் தேவையில்லாமல் பெரிதுப்படுத்துகின்றன என்று கூறினார். இதையடுத்து நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், ‘‘திலீப்  தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனவே இப்போது இந்த  மனுவை விசாரிக்க தேவையில்லை. திலீப் ஒரு பிரபல நடிகராக இருப்பதால் தான்  பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. இதில் தவறு இல்லை’’ என்று கூறி மனுவை  தள்ளுபடி செய்தது.

Tags : Dileep ,CBI , Actor rape case, CBI probe, actor dileep, petition, dismissal
× RELATED பள்ளி மாணவி எரித்து கொல்லப்பட்ட...