பெரும்பிடுகு முத்தரையரை தமிழரின் அடையாளமாக போற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை

சென்னை: மத்திய கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரும்பிடுகு முத்தரையரின் 1,44வது சதயவிழா இன்று கொண்டாடப்பட உள்ளது. குறுநில மன்னருள் தலைசிறந்து விளங்கிய பெரும்பிடுகு முத்தரையர் ஆட்சி காலங்களில் தமிழை வளர்ப்பதிலும், சம தர்மத்தை பேணுவதிலும் முக்கிய பங்காற்றி இருப்பது அவரது வரலாற்றை படிக்கும்போது அறிய முடிகிறது. நான் ஒவ்வொரு ஆண்டும் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில் நேரடியாக கலந்துகொண்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

ஆனால், இம்முறை இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் தவிர்க்க முடியாத சூழலில் நேரில் சென்று மரியாதை செலுத்த முடியாத நிலையில், அவரது வீரத்தையும், ஆளுமையையும் போற்றி நினைவு கூர்ந்து அவருக்கு வீர வணக்கத்தை மனதார செலுத்துவதை எனது  கடமையாக கருதுகிறேன். அவரை குறிப்பிட்ட சமுதாயத்தின் மன்னராக கருதாமல் தமிழரின் அடையாளமாக போற்ற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Ponnarathiran ,Tamils , Muttaraiyarai, a sign of Tamils, Ponnarathiran, report
× RELATED மேலூரில் டெங்கு காய்ச்சல் அறிகுறி இல்லை