×

பிரமோஸ் ஏவுகணை வான்வெளி சோதனை வெற்றி

புதுடெல்லி: விமானப்படை பயன்பாட்டிற்காக வானிலிருந்து தரை மற்றும் கடல் இலக்குகளை தாக்கும் பிரமோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. 2.5 டன் எடையுடன் கூடிய இந்த ஏவுகணை 300 கிமீ தூரம் பயணம் சென்று இலக்கும் தாக்கும் திறன் படைத்தது. இது ஒலியை விட  மடங்கு வேகத்தில்(2.8 மேக்) செல்லும். இந்த ஏவுகணையை விமானப்படை அந்தமானில் நேற்று சோதித்து பார்த்தது. சுகாய்-30 ரக போர் விமானத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது.

விமானத்திலிருந்து மிகவும் எளிதாக வெளியேறிய இந்த ஏவுகணை சரியான பாதையில் சென்று கடலில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக தாக்கியது. இதை ஏவுவதற்காக சுகாய் போர் விமானத்தின் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மற்றும் சாப்ட்வேர்கள் மாற்றியமைக்கப்பட்டன. 2.8 மேக் வேகத்தில் செல்லும் ஏவுகணையை, உலகில் எந்த நாட்டு விமானப்படையும் இதுவரை வெற்றிகரமாக சோதித்து பார்த்ததில்லை.


Tags : Pyramid missile, airspace, test, success
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...