காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 8826 காவலர் பணிக்கு ஜூலை 14ம் தேதி எழுத்துத்தேர்வு

சென்னை: காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 8,826 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு ஜூலை 14ல் நடக்கிறது. காவல்துறையில் 2ம் நிலை காவலர் (பெண்கள், திருநங்கைள்) 2,465, இரண்டாம் நிலை காவலர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை (ஆண்கள்) 5,962, சிறைத்துறை இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண்) 186, (பெண்கள்) 22, தீயணைப்பாளர் ஆண்கள் 191 என மொத்தம் 8,826 காலி பணியிடங்கள் உள்ளன.  

இதற்கு மாத ஊதியம் 18,200-52,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் இணைய வழியில் ஏப்ரல் 8ம் தேதிக்குள் விண்ணப்பிங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளாமானோர் சம்மந்தப்பட்ட பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கான தேர்வு வரும் ஜூலை 14 ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்கிறது.

× RELATED அதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்டு...