×

8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 26 மாவட்டங்களில் குறைந்தது நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்க நடவடிக்கை தேவை

சென்னை: 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்துள்ள நிலையில் நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க புது விதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய நிலத்தடி நீர் வாரியம் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. தமிழகத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாகவும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதன் விளைவாக கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்று விட்டது.  

குறிப்பாக, கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 4.7 மீட்டராக இருந்த நிலையில், 2019 ஏப்ரல் மாதத்தில் 6.48 மீ ஆகவும், காஞ்சிபுரத்தில் 4.62ல் 5.41 ஆகவும், ேகாவையில் 9.56ல் 13.57 ஆகவும், திருச்சி 7.28ல் 10.96 ஆகவும், வேலூர் 5.88ல் 10.62 ஆகவும் தர்மபுரியில் 7.21ல் 14.28 ஆகவும், கிருஷ்ணகிரியில் 7ல் 9.19 ஆகவும், கடலூரில் 4.78ல் 7.08 ஆகவும், விழுப்புரம் 4.51ல் 9.17 ஆகவும், திருவாரூர் 2.93ல் 5.67 ஆகவும், கரூர் 6.80ல் 10.96 ஆகவும், பெரம்பலூர் 5.44ல் 13.65 ஆகவும், புதுக்கோட்டை 4.79ல் 8.26 ஆகவும், சேலம் 8.45ல் 11.85 ஆகவும், நாமக்கல் 9.1ல் 11.85 ஆகவும், ஈரோட்டில் 6.09ல் 13.36 ஆகவும், மதுரை 4.12ல் 8.08 ஆகவும், ராமநாதபுரத்தில் 4.22ல் 4.68 ஆகவும், சிவகங்கை 5.38ல் 9.08 ஆகவும், தஞ்சாவூர் 3.31ல் 3.58 ஆகவும் தேனி 6.41ல் 9.17 ஆகவும், தூத்துக்குடி 3.32ல் 6.22ஆகவும், விருதுநகர் 6.78ல் 10.10 ஆகவும், திருவண்ணாமலை 5.19ல் 9.50 ஆகவும், திண்டுக்கல் 6.84ல் 10.90 ஆகவும், கன்னியாகுமரி 6.2ல் 7.04 மீட்டராகவும் குறைந்துள்ளது.

குறிப்பாக, கடந்த 8 ஆண்டுகளில் 3 மீட்டர் முதல் 8 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் சரிந்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் சூழ்நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் 400 அடி வரை போர்வெல் போட்டாலும் தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ள பகுதிகளில் தண்ணீர் எடுக்க கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் தாலுகா அளவில் ஆய்வு முடிவு அரசுக்கு சமர்பிக்கப்படுகிறது. ஆனால், இந்த ஆய்வு முடிவை வைத்து நிலத்தடி நீர் எடுக்க எந்த கட்டுபாடும் விதிக்கப்படவில்லை. இதனால், தொடர்ந்து நிலத்தடி நீர் மட்டம் அதிகளவில் உறிஞ்சப்பட்டு வந்தததால் தற்போது அதளபாதாளத்திற்கு சென்று விட்டது. இந்த நிலையில், மத்திய நிலத்தடி நீர் வாரியம் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், ‘தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் நிலத்தடி நீர் மூலம் தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்படும். மேலும். நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க நிலத்தடி நீர் பயன்பாட்டு ெதடார்பாக புதிய விதிகள் ஒன்றை உருவாக்க வேண்டும்’ என்று அந்த கடித்தில் கூறியுள்ளது.

Tags : districts , In 26 districts, ground water,
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...