பெரம்பலூர் அருகே குடிநீர் கலங்கலாக வருவதை கண்டித்து மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் போதுமான அளவு குடிநீர் வினியோகிக்காததைக் கண்டி த்தும், இன்று விநியோகித்த குடிநீர்  கலங்கலாக  இருந்ததைக் கண்டித்தும் பொது மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். கடந்த 2 மாதங்களாக ஏற்பட்டுள்ள கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் பெரம்பலூர் நகராட்சி திண்டாடி வருகின்றது. நகரில் உள்ள 21 வார்டுகளில், கடந்த ஒரு மாதத்திற்குள் துறைமங்கலம், வெங்கடேச புரம், சங்குப் பேட்டை, கம்பன் நகர், உள்ளிட்டப் பகுதிகளில் 5முறைக்கு மேல் முறையாக குடிநீர்  விநியோகிக்காத தைக் கண்டித்து மக்கள் சாலை மறியல் நடந்துள்ளன.

இந்நிலையில்  பெரம்பலூர் நகராட்சி 9வது வார்டு துறைமங்கலம் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முறையாக குடிநீர் வினியோகிக்காததை கண்டித்து சாலை மறியலில் நடத்தப்பட்டது. அப்போது வாக்குறுதி அளித்த நகராட்சி அதி காரிகள் பின்னர், முழுமையாக  குடிநீர் விநியோகிக்காமல் மெத்தனமாக இரு ந்ததாலும், குறைந்தளவு விநியோகித்த குடிநீரும் கலங்கலாக இருந்ததாலும் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை 7.15 மணிமுதல் 3 ரோடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் - திருச்சி, பெரம்ப லூர் -  அரியலூர் சாலையில் செல்லும் அனைத்து பஸ்களின் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் டவுன் இன்ஸ்பெக்டர் பிருதி விராஜன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்க ளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் வாக்குப்பதிவு முடிந்தவுடன், நகராட்சி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி முறைப்படி குடிநீர் வினி யோகிக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் சாலை மறி யலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் பெரம்பலூர் - திருச்சி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

Related Stories: