×

மயிலாடுதுறையில் பாராக மாறிவரும் நாலுகால் மண்டபம்

* முள்வேலியை அகற்றி குடிமகன்கள் அட்டகாசம்

மயிலாடுதுறை  :  மயிலாடுதுறை நாலுகால் மண்டபத்தை சுற்றியுள்ள முள்வேலியை அகற்றி, மதுஅறுந்தும் இடமாக குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள  காவிரி புதுப்பாலம் அடுகே அமைந்துள்ள  ஆழ்வார்களால் பாடல்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான  சிறப்பு மிக்க திருவிழந்தூர் ஸ்ரீ பரிமள ரெங்கநாதர் ஆலயத்திற்கு சொந்தமான நான்குகால் மண்டபம்.

நூற்றாண்டு காலமாக  இருந்து வரும் இம்மண்டபம் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாலுகால் மண்டபத்தில்  திருவிழாக் காலங்களில் பெருமாள் எழுந்தருளி அருகில் உள்ள காவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு ஆராதனைகள் அலங்காரங்கள், அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தல் உள்ளிட்ட ஆன்மீக அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.

இந்த வைபவங்களுக்ககாவே பிரத்யோகமாக கருங்கல் கொண்டு கலைநுட்பத்துடன் கூடிய சிறப்புமிக்க மண்டபத்தினை முன்னோர்கள் ஏற்படுத்தி கட்டிக் கொடுத்துள்ளனர். பல ஆண்டுகளாகவே மேற்படி மண்டபம் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் திறந்த வெளியில் சுகாதாரமற்ற  நிலையில் காணப்பட்டது. கடந்த 2017ல் மயிலாடுதுறையில் காவிரியில் மஹா புஷ்கார விழா நடைபெற்ற சமயத்தில் திருவிழந்தூர் பெருமாள் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதியை சார்ந்த ஆன்மீக அன்பர்களின் பொருளுதவியால் மேற்படி மண்டபம் வர்ணம் பூசப்பட்டு  சுற்று கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன.

தற்பொழுது அந்த கம்பி வேலிகள் அகற்றப்பட்டு குடிமகன்களின் பாராகிவிட்டது.  மீண்டும் அப்பகுதியில் இந்து அறநிலையத்துறையினர் கம்பி வேலி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இகுதுறித்து சமூக ஆல்வலர் அப்பர்சுந்தரம் கூறுகையில், ‘கம்பி வேலிகள் அமைக்கப்பட்டதால் சமூக விரோதிகள் அந்த மண்டபத்தினுள் செல்ல இயலாமல் போனது. குறிப்பாக குடிகாரர்களுக்கு பெரும் வசதியாக இருந்த இவ்விடம் கம்பி வேலி அமைக்கப்பட்டது பெரும் இடைஞ்சலாக மாறிப்போனது.  பலமாதங்கள் தவித்துவந்த இவர்கள் தற்போது கம்பிவேலியை பெயர்த்து விட்டு உள்ளே மண்டபத்தினுள்  சென்று  மது அருந்துவதை தற்போது காண முடிகிறது.  

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மண்டபத்தினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளதால், இந்து அறநிலையத் துறை உடனே மேற்படி மண்டபத்தினை சுற்றியும், அதன் வெளியிலேயும் பாதுகாப்பு நிரந்தர இரும்பு  வெளியை அமைத்திட வேண்டும். கம்பிவேலியை பெயர்த்தவர் மீது காவல்துறை உரிய  நடவடிக்கை எடுத்திடவும், மேற்படி பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து  கண்காணிக்கவும்  நகரத்தின்   அனைத்து  பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

Tags : Nalukal Mandapam ,Mayiladuthurai , mayiladuthurai ,Bar, Drinkers Problem
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...