ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை வரும் 27ம் தேதி முதல் நீக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், வாரம் ஒருமுறை பொதுமக்களின் போக்குவரத்துக்கு விதிக்கபட்டுள்ள தடை வரும் 27ம் தேதி முதல் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்பு படையினரின் வாகனத்தைக்  குறி வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர்.

 இதையடுத்து பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் செல்லும் நேரத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்களின் வாகன போக்குவரத்திற்கு, வாரத்தில் 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி புதன் மற்றும் ஞாயிற்று கிழமை பகல் முழுவதும் அமலில் இருந்து வந்த தடை கடந்த 7ஆம் தேதி, வாரம் 1 நாள் மட்டும் என குறைக்கப்பட்டது. அதன்படி ஞாயிற்று கிழமை மட்டுமே பொது மக்களின் போக்குவரத்துக்கு தடை நீடித்து வருகின்றது. இந்த தடையும் வரும் 27ஆம் தேதி முதல் நீக்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

Related Stories: