புதுக்கோட்டை வெள்ளாற்றில் இயங்கி வரும் சட்டவிரோத மணல் குவாரிகள் பற்றி அறிக்கை தர ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வெள்ளாற்றில் இயங்கி வரும் சட்டவிரோத மணல் குவாரிகள் பற்றி அறிக்கை தர ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வெள்ளாற்றில் மணல் கொள்ளை குறித்தும் சோதனைச்சாவடி மற்றும் சிசிடிவி அமைக்கப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. புதுகோட்டை மாவட்டம் அரிமளத்தைச் சேர்ந்த பாலமுருகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


× RELATED மூளைகாய்ச்சல் பலி நிலவரம் குறித்து...