அரசு உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டது கரூரில் மீண்டும் தாராளமாக பாலித்தீன் புழக்கம்

கரூர் : அரசுஉத்தரவை காற்றில்பறக்கவிட்டு பாலித்தீன் மீண்டும் தாராளமாக புழக்கத்திற்கு வந்துள்ளது. ஜூன்1முதல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களுக்கு அரசுதடைவிதித்தது. கரூர் மாவட்டத்திலும் இந்த தடை அமலுக்கு வந்தது. துவக்கம் முதலே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிளாஸ்டிக் தடையை அமலாக்குவதில் சுணக்கம் காட்டிவந்தனர்.

குறிப்பாக குளித்தலையில் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட தலைநகரான கரூரில் இந்த அளவுக்கு பறிமுதல் செய்யப்படவில்லை. அதிகாரிகளைக் கேட்டால் ரைடுக்கு போவோம் போவோம்என்ற பதிலே வந்தது. ஆனால் எந்த சோதனையும் நடத்தவில்லை. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தான் பிளாஸ்டிக்தடையை தொடர்ந்து பறிமுதல் நடவடிக்கை  பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாரிகள் உள்ளாட்சி அதிகாரிகள் தான்நடவடிக்கை எடுக்க முடியும் என கைவிரித்துவிட்டனர்.

எனினும் குளித்தலை நகராட்சியிலும சில ஊராட்சிகளிலும் கூட அதிகாரிகள் பறிமுதல்செய்கின்றனர். ஆனால் கரூரில் பறிமுதல் நடவடிக்கைஇல்லை. கடந்த வாரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலையிட்டு பேருந்துநிலைய பகுதிகளில் பறிமுதல் நடவடிக்கையை துவக்கி வைத்தார். அசைவ உணவுக்கூடங்கள், கறிக்கடைகளில் இலையை பயன்படுத்திவந்தநிலை மாறி தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்கள் மீண்டும் புழக்கத்திற்கு வந்து விட்டது. பாலித்தீன் கவர்களையே பயன்படுத்தாமல் வாழை இலை பாக்குமட்டைதட்டு என மாறியவர்கள் மீண்டும் பாலித்தீன் கவர்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

கையேந்திபவன்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் என பாலித்தீன் பயன்பாடு அதிகமாக உள்ளது. குறிப்பாக அசைவ உணவுகள், இறைச்சி வகைகளை பாலித்தீன் பைகளில் வைத்து கொடுக்கின்றனர்.  வாழை இலைக்கு பதிலாகஅசைவஉணவுகளை பிளாஸ்கவர்களை பயன்படுத்தி கொடுக்கின்றனர். பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பேரூராட்சிகளில் எங்குபார்த்தாலும் பாலித்தீன்கவர்கள்தான். தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து கட்சிநிர்வாகிகள் முகாமிட்டிருந்ததால், அதிக அளவில் பாலித்தீன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள்உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு உத்தரவை செயல்படுத்த வேண்டும். உத்தரவை அதிகாரிகளே காற்றில் பறக்கவிட்டால்  மழைநீர் சேகரிப்பு திட்டம் போல ஒப்புக்கான திட்டமாகிவிடும். மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் பல இடங்களில் செயல்படவில்லை. குறிப்பாக அரசு கட்டடங்களிலேயே இந்த அமைப்புகள் பராமரிப்பின்றி செயலற்று போனதால்  மழை பெய்யும்போது மழைநீர் வடிகாலில் போய் கலந்துவருகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags : government ,Karur , Karur, Plastic usage, Fine, action
× RELATED ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும்...