அன்னவாசல் அருகே அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு

இலுப்பூர் : அன்னவாசல் அருகே கீழக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின் சாதன பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை அன்னவாசல் போலீசார் தேடி வருகின்றனர். அன்னவாசல் - கீரனூர் சாலை கீழக்குறிச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.  இப்பள்ளியில் முழு ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி வகுப்பு அறை மற்றும் கம்ப்யூட்டர் அறைகள் பூட்டிக்கிடந்தது.

மேலும், இந்த பள்ளியில் சுற்று சுவர் ஆங்காங்கே உடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் இப்பள்ளியின்  துப்புரவு பணியாளர்  நேற்று பள்ளியை தூய்மை படுத்த வந்த போது பள்ளியில் கம்யூட்டர் அறை கதவு திறக்கப்பட்டு கம்யூட்டர் மற்றும் மின்சாதன பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆசிரியர்கள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த  அறையில் இருந்த மானிட்டர், சிபியு மற்றும் புபிஎஸ் போன்ற மின் சாதன பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டர். மேலும் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : government school ,Annavasal , Pudukkottai ,Annavasal ,Computers ,Robbed ,Government School
× RELATED ஓமலூர் அருகே சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடங்கள்