×

சிதம்பரம் அருகே திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி: பழனியைச் சேர்ந்த தேன்மொழி முதலிடம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே நடைப்பெற்ற திருநங்கைகளுக்கான அழுகிப்  போட்டியில் பழனியைச் சேர்ந்த தேன்மொழி முதல் பரிசை தட்டிச் சென்றார். சிதம்பரம் அருகே கோத்தட்டை கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் திருநங்கைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. வழக்கமாக ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் திருநங்கைகள் 40 ஆண்டுகளில் முதற்முறையாக நாட்டுப்புற பாடல்களை பாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் முக்கிய நிகழ்வாக திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைப்பெற்றது.

நடிகை ரேகா தொடங்கி வைத்த இந்த அழகிப் போட்டியில் 15 திருநங்கைகள் பங்கேற்று ஒய்யாரமாகவும், நளினமாகவும் நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இதில் பழனியை சேர்ந்த திருநங்கை தேன்மொழி முதல் பரிசை தட்டிச் சென்றார். நாகூரை சேர்ந்த ராபியா இரண்டாவது இடத்தையும், தஞ்சாவூரை சேர்ந்த சந்தியா மூன்றாவது இடத்தையும் தட்டி சென்றனர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அரசு தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வெற்றி பெற்ற திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : transgender ,Chidambaram ,Palani , Chidambaram, beauty contest, transgender
× RELATED சிதம்பரம் நாடாளுமன்ற ெதாகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்