வாக்கு எண்ணிக்கை மையத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மோசம்

விருதுநகர் : விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்களை தனிமைப்படுத்தி செய்தி சேகரிக்கவிடாமல் தடுக்கும் வகையில் விளையாட்டு மைதானத்தின் நடுவில் அடிப்படை வசதிகள் இல்லாத குறுகலான அறையை ஒதுக்கி இருப்பது எதற்காக என கேள்வி எழுந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சென்று செய்தி சேகரிக்க பத்திரிக்கைக்கு ஒரு நபரும், டிவிக்கு இருவர் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தின் நடுவில் உள்ள கட்டிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்ட பத்திரிக்கை, தொலைக்காட்சியினர் செய்தி சேரிக்க ஒதுக்கப்பட்ட அறையில் 30 பேருக்கு மேல் நிற்ககூட முடியாது. ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு செல்ல ஒரு கி.மீ வரை நடந்து செல்ல வேண்டும். ஒரு முறை வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று வந்தால் மூச்சு வாங்கும் அளவிற்கு இடையூறுகள், தடுப்புகள், தூரமும் அமைந்துள்ளன.

விளையாட்டு மைதானத்தின் நடுமையத்தில் உள்ள அறையாக இருப்பதால் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் அறைக்குள் இருக்க முடியாத அளவிற்கு அனல்காற்று வீசுகிறது.

மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து யாரும் வெளியே சென்று வர முடியாத அளவிற்கு சுற்றி சவுக்குகட்டை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாத ஒரு அறையை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி பத்திரிக்கையாளர்களை தனிமைப்படுத்தி உள்ளது.

பத்திரிக்கையாளர்கள் செய்தி சேரிக்க விடாமல் தடுக்கவும், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் அரங்கேற்றம் செய்வதற்காக வழக்கமாக ஒதுக்கும் அறையில் இருந்து மாற்று ஏற்பாடுகளை செய்து பத்திரிக்கையாளர்களை ஒரம்கட்டி தனிமைப்படுத்தி இருப்பதாக பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: