இலங்கையில் பதற்றம்...... இரு தரப்பினர் இடையே மோதல்: ஒருவர் பலி

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள கிரான்ட்பாஸ் பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு நடைபெற்ற தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்தனர்.  காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரான்ட்பாஸ், வெஹெரகொடல்லே, கம்பித்தொட்டு பகுதியில் நேற்றிரவு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

Advertising
Advertising

இதில்  46 வயதான இந்திரஜித் சுகத் என்பவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து கடந்த சில தினங்களாக மசூதிகள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: