பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு

லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயானது 4-வது கட்டத்தை எட்டி விட்டதால் நூர் பாத்திமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதேசமயத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஆசிப் அலி விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் 2 வயது சிறுமி நூர் பாத்திமா கடந்த ஞாயிறன்று உயிரிழந்தார்.  நூர் பாத்திமாவின் மறைவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அறிவித்த உலகக்கோப்பைக்கான உத்தேச அணியில் ஆசிப் அலி இடம்பெறவில்லை. இதனையடுத்து கடந்த திங்களன்று மூன்று வீரர்களை நீக்கி அதற்கான மாற்று வீரர்களை பாகிஸ்தான் அறிவித்தது. இதில் ஆசிப் அலி பெயர் இடம்பெற்றுள்ளது. உலகக்கோப்பையில் முதன்முதலாக விளையாடப்போகும் ஆசிப் அலிக்கு


× RELATED கடகம்