தலீபான், ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்: 25 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலீபான், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தின் கான் அபாத் மற்றும் அதையொட்டிய அக்டாஷ் மாவட்டங்களில் பதுங்கி இருந்த தலீபான் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு ராணுவம் நேற்று அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 12-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர்.

Advertising
Advertising

இந்த தாக்குதலில் ராணுவ தரப்பில் எந்த ஒரு சேதமும் இல்லை என தகவல்கள் கூறுகின்றன. இதேபோல் நங்கர்ஹார் மாகாணத்தின் சபார்ஹர் மாவட்டத்தின் மலைப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு ராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் தலீபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

Related Stories: