×

ராஜிவ் காந்தி நினைவு நாள் வறுமையை போக்க பல திட்டங்களை கொண்டு வந்தவர்: கே.எஸ்.அழகிரி புகழாரம்

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் சார்பில் பல்வேறு நினைவஞ்சலி கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜிவ் காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் கொண்டு வரப்பட்ட ராஜிவ் ஜோதி பெறப்பட்டது. பின்னர் நேற்று மாலை அண்ணா சாலை முதல் சத்தியமூர்த்திபவன் வரை அமைதி ஊர்வலம் மற்றும் இசையஞ்சலி நிகழ்ச்சியும் நடந்தது.  

நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சிரிவல்ல பிரசாத், மூத்த தலைவர் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார், முன்னாள் எம்பி ராணி, சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், ரூபி மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பொன் கிருஷ்ணமூர்த்தி, ஜோதி, மயிலை தரணி, சுமதி அன்பரசு உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவை நவீனமயமாக்க கம்ப்யூட்டர் கொண்டு வந்தவர். இந்தியாவின் வறுமையை போக்குவதற்காகவும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். சில கொலைகார கும்பல்களால் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது மிகவும் வருத்தத்துக்குரியது. எங்களின் கட்சியும், எங்களது தலைமையும் உங்களை மன்னித்திருந்தாலும், நான் தமிழ் சமுதாயத்திற்கும், இந்திய சமுதாயத்திற்கும் சொல்வது வன்முறை என்பது பிரச்னைகளுக்கு தீர்வாகாது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Rajiv Gandhi ,KS Azhagiri , Rajiv Gandhi, Memorial Day, Poverty, Many Projects, KS Azhagiri, praise
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...