வேளாண்மை படிப்புக்கு 37,000 பேர் விண்ணப்பம்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 உறுப்பு மற்றும் 27 இணைப்பு கல்லூரி உள்ளது. இதில், இளங்கலை அறிவியல் பிரிவில் 6 படிப்புகள் மற்றும் உயிர்தொழில் நுட்பவியல் பிரிவில் 4 தொழில்நுட்ப படிப்புகள் என மொத்தம் 10 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு 2019-2020ம் ஆண்டில் அறிவியல் படிப்பில் 3,695 இடங்கள், தொழில்நுட்ப படிப்பில் 210 இடங்கள் என மொத்தம் 3,905 இடங்கள் நிரப்பப்படுகிறது.

பிளஸ்2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது கணினி அறிவியல் பிரிவுவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேளாண் படிப்புகளுக்கு //tnauonline.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வேளாண் படிப்புகளுக்கு மொத்தம் 37 ஆயிரத்து 720 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Related Stories: