வேளாண்மை படிப்புக்கு 37,000 பேர் விண்ணப்பம்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 உறுப்பு மற்றும் 27 இணைப்பு கல்லூரி உள்ளது. இதில், இளங்கலை அறிவியல் பிரிவில் 6 படிப்புகள் மற்றும் உயிர்தொழில் நுட்பவியல் பிரிவில் 4 தொழில்நுட்ப படிப்புகள் என மொத்தம் 10 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு 2019-2020ம் ஆண்டில் அறிவியல் படிப்பில் 3,695 இடங்கள், தொழில்நுட்ப படிப்பில் 210 இடங்கள் என மொத்தம் 3,905 இடங்கள் நிரப்பப்படுகிறது.

பிளஸ்2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது கணினி அறிவியல் பிரிவுவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேளாண் படிப்புகளுக்கு http://tnauonline.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வேளாண் படிப்புகளுக்கு மொத்தம் 37 ஆயிரத்து 720 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

× RELATED தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு 53,176 பேர் விண்ணப்பம்