குழந்தைகளின் எடை குறைவை தடுக்கும் போஷன் அபியான் திட்டம் தமிழகத்தில் முடக்கம்

கோவை: தமிழகத்தில் போஷன் அபியான் திட்டத்தை ெபரும்பாலான மாவட்டங்களில் விரிவாக்கம் செய்யாமல் நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மத்திய அரசின் நிதியுதவியுடன் போஷன் அபியான் திட்டம் கடந்த 2017ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. ேதசிய சத்துணவு திட்ட துறை மூலமாக அங்கன்வாடிகளில் இந்த திட்டம் அமலாக்கப்பட்டது.  தமிழகத்தில் அரியலூர், திண்டுக்கல், நீலகிரி, விழுப்புரம், சென்னை, ராமநாதபுரம், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், திருவள்ளூர் என 11 மாவட்டத்தில் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. மேலும், பல மாவட்டங்களில் இந்த திட்டம் விரிவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் விரிவாக்கப்படவில்லை. நடப்பாண்டில் இந்த திட்டத்தின் நிலை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. சமீபத்திய ஆய்வில், மாநில அளவில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு போதுமான ஊட்டசத்து கிடைப்பதில்லை என தெரியவந்துள்ளது. அங்கன்வாடிகளில் கலவை சாதம், காய்கறி, 5 நாள் முட்டை என சத்தான உணவு வழங்கியும் குழந்தைகளின் எடை குறைவாகவே இருப்பதாக தெரிகிறது.


போஷன்  அபியான் திட்டத்தில் குழந்தைகளின் எடையை கண்டறிய, மாவட்டம், மாநில அளவில் கமிட்டி அமைத்து ஆலோசிக்க, திட்டங்களை செயலாக்க கடந்த ஆண்டு 21.53 ேகாடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆலோசனை, ஆய்வுக்காக பெரும் தொகையை மத்திய அரசு ஒதுக்கியும் மாநில சமூக நலத்துறை, ஊட்டசத்து துறை அதிகாரிகள் குழந்தைகளின் ஆரோக்கியம், உடல் எடை, நோய் தடுப்பு முயற்சிகளில் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அங்கன்வாடிகளில் சத்துணவு திட்டம் முறையாக செயல்பாட்டில் இல்லாமல்  இருப்பதால்தான் குழந்தைகளின் எடை குறைவாக இருக்கிறது. 7 முதல் 25 சதவீத குழந்தைகள் எடை குறைவு பிரச்னையிலும், 10 முதல் 30 சதவீத குழந்தைகள் நோய் பாதிப்பு பிரச்னையிலும் தவிப்பதாக தெரியவந்துள்ளது. போஷாக்கான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறதா, முட்டை, காய்கறி போன்றவை அங்கன்வாடிகளில் போதுமான அளவு உள்ளதாக்கிறதா, முறைகேடு, விதிமுறை மீறல் நடக்கிறதா என கண்டறிய மாநில, மாவட்ட கமிட்டி முயற்சிக்கவில்லை. போஷன் திட்டம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் 32 மாவட்டங்களிலும் அமலாக்கவேண்டும். சத்துணவு வழங்குவதை கண்காணித்து முறைகேடுகளை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Weight of children, Potion Abhiyan project, freezing
× RELATED போஷன் அபியான் திட்டத்தின் கீழ் வேதை...