×

நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஐதராபாத்: வருங்காலங்களில் மக்களவை தேர்தலை 5 கட்டத்தில் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி யோசனை தெரிவித்துள்ளார்.  அவர் நேற்று அளித்த பேட்டி: மக்களவை தேர்தலை தேர்தல் ஆணையம் சிறப்பாக நடத்தியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக புகார்கள் கூறப்படும் நிலையில் அரசியல் கட்சியினர் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது.  தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தேர்தல் ஆணையம் விரைவாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் நடவடிக்கை எடுப்பது மிக அவசியம். முடிவு எடுப்பது தொடர்பாக ஒரு தேர்தல் ஆணையர் எதிர்ப்பு தெரிவித்தால் அவரது கருத்தை கேட்பது மிக அவசியம். காரணம் எதுவும் இல்லாத நிலையில் அவரது கருத்தை ஏற்க மறுக்கக்கூடாது. ேமற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதுபோன்ற பிரச்னை எழும்போது தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஒரே பிரம்மாஸ்திரம் தேர்தலை தள்ளி வைப்பதே.

வன்முறையில் ஈடுபட்டால் தேர்தல் தள்ளி வைக்கப்படும் என்ற பீதி அரசியல் கட்சியினருக்கு ஏற்படும். இந்த தேர்தலில் தனிப்பட்ட நபர்கள் மீதான தாக்குதல் மற்றும் வெறுப்புணர்வு பேச்சுகள் அதிகம் நடைபெற்றது. இது என்னை மிகவும் பாதித்தது. இவ்வாறு பேசும் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் தேர்தலை 4 முதல் 5 என்ற குறுகிய காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கேற்ப துணை ராணுவப்படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

Tags : Behavior violations, action,
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!