ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை திட்டம்

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியின் காரணமாக தற்காலிகமாக தங்கியுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த குறிப்பிடத்தகுந்த நபர்களுக்கு  நிரந்தர குடியுரிமை வழங்கும் திட்டத்தை அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும் கடந்த செவ்வாயன்று அறிவித்தார். “அமீரகத்தின் முன்னேற்றதிற்கு உதவும் வகையில் முதலீடு செய்தவர்கள், மருத்துவம், பொறியியல், அறிவியல், கலைகள் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு ‘கோல்டு கார்டு’ வழங்கப்படும். இந்த கார்டு வைத்துள்ளவர்கள் அமீரகத்தில் நிரந்தர குடியுரிமை பெற தகுதி உடையவர்கள். முதல் கட்டமாக 6,800 முதலீட்டாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மொத்தம் 100 பில்லியன் திராம் (₹1.90 லட்சம் கோடி) முதலீடு செய்துள்ளார்கள்” என்று ஷேக் முகமது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சிறப்பு வாய்ந்த நிபுணர்கள், அதீத திறமை வாய்ந்தவர்கள், அமீரகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள், உதவியவர்கள் ஆகியோரின் சேவையை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க கோல்டு கார்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: