வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் சீன பொருட்களால் பாதிப்பு

திருப்பூர்: அமெரிக்கா-சீனா வர்த்தக கொள்கையில் ஏற்பட்ட முரண்பாடுகளால், சீன பொருட்கள் வங்கதேசம் வழியாக இந்தியாவிற்குள் வருவதால் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது: சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரியை உயர்த்தியுள்ளதால், அமெரிக்க இறக்குமதியாளர்களின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இதனால், இந்திய பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சீனாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 10 சதவீதம் குறைந்து, அதில் 20 சதவீத இந்தியா பெற்றாலே ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி வாய்ப்பு உருவாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஜவுளி ஏற்றுமதியில் பெரிய வளர்ச்சி இல்லை.

Advertising
Advertising

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா சிறிது வரி குறைப்பு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி ரிட்டர்ன்களை துரிதப்படுத்த வேண்டும். 90 சதவீதம் ஏற்றுமதி பொருட்களுக்கு 3 நாட்களுக்குள் ரீபண்ட் வழங்க வேண்டும். அமெரிக்கா, சீன வர்த்தக போரில் அதிகம் பயன் அடையப் போவது வியட்நாம். சீன பொருட்கள் வங்கதேசம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதால், எல்லைப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மேலும், அமெரிக்காவின் ஜவுளிச்சந்தையை இந்தியா பிடிக்க ஒருசில சலுகைகளை அரசு வழங்கி பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

Related Stories: