மாநில டேபிள் டென்னிஸ் மே 31க்குள் பதிவு செய்யலாம்

சென்னை: மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் மே 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து  சென்னை டேபிள் டென்னிஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநில அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி  ஜூன் 7, 8, 9 தேதிகளில் நடைபெற உள்ளது. சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள்,  சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர், கார்பரேட் உட்பட  14 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை ஐசிஎப் உள் விளையாட்டரங்கில்  நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் மே 31ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு மற்றும் விவரங்களுக்கான மின்னஞ்சல் முகவரி:  tnttaentries@gmail.com 

Advertising
Advertising

Related Stories: