×

சில்லி பாயின்ட்...

* உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு டோனியின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பயிற்சியாளர் சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஅ) நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* உலக கோப்பையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்த விரும்புகிறேன் என்று இங்கிலாந்து வேகம் ஜோப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.
* கடந்த மாதம் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து உபயோகித்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து பெறப்பட்ட ‘பி’ சாம்பிள் பரிசோதனையிலும் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியானால் அதிகபட்சமாக 4 ஆண்டு தடை விதிக்கப்படும் என தெரிகிறது.
* சுதிர்மான் கோப்பை பேட்மின்டன் தொடரில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் போராடி தோற்றது.
* அர்ஜென்டினா கால்பந்து அணி முன்னாள் நட்சத்திரம் டீகோ மரடோனாவுக்கு தோள்பட்டை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.


Tags : Dhoni, Indian team,
× RELATED சில்லி பாயின்ட்...