அயர்லாந்துடன் 2வது ஒருநாள் ஆப்கானிஸ்தான் 305 ரன் குவிப்பு: முகமது ஷாஷத் அபார சதம்

பெல்பாஸ்ட்: அயர்லாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 305 ரன் குவித்தது. ஸ்டோர்மான்ட், சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசியது. ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது. அபாரமாக விளையாடிய தொடக்க வீரர் முகமது ஷாஷத் 101 ரன் (88 பந்து, 16 பவுண்டரி) விளாசினார். ரகமத் ஷா 62 ரன் (90 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஹஷ்மதுல்லா ஷாகிதி 47 ரன் (48 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய நஜிபுல்லா ஸத்ரன் 60 ரன்னுடன் (33 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.அயர்லாந்து பந்துவீச்சில் மார்க் அடேர் 3, மெக்பிரைன் 2, ரேங்க்கின், ஸ்டர்லிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 306 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது.

Advertising
Advertising

Related Stories: