காவலர் குடியிருப்பில் துணிகரம்ஏட்டு வீட்டில் நுழைந்து 10 சவரன் கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை

சென்னை: எழும்பூர் காவலர் குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்த தலைமை காவலர் வீட்டில் 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராஜா (27). இவர், எழும்பூரில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 20ம் தேதி சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்ற ராஜா, அங்கிருந்து நேற்று அதிகாலை எழும்பூரில் உள்ள தனது குடியிருப்பிற்கு வந்துள்ளார். ஊரில் இருந்து வரும் போது பையில் தனது மனைவியின் நகைகள் 10 சவரனை எடுத்து வந்தார்.

Advertising
Advertising

இரவு முழுவதும் பயணம் செய்ததால் அசதியில் வீட்டிற்கு வந்த உடனே தனது பையை படுக்கை அறையில் வைத்துவிட்டு சரியாக கதவை மூடாமல் தூங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் 8 மணி அளவில் எழுந்து பையில் இருந்த 10 சவரன் நகையை எடுத்து பீரோவில் வைக்க பார்த்த போது, பையில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து ராஜா எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தஞ்சாவூரில் இருந்து ரயில் மூலம் பயணம் செய்யும் போது நகை மாயமானதா அல்லது காவலர் குடியிருப்பிற்கு வந்த பிறகு நகை மாயமானதா என விசாரிக்கின்றனர்.

Related Stories: