நள்ளிரவில் வீடு புகுந்து ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு

அண்ணாநகர்; அமைந்தகரையில் வீடு புகுந்து ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.அமைந்தகரையை சேர்ந்தவர் சுந்தர் (40), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊரான விழுப்புரம் சென்றுள்ளனர். சுந்தர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் சுந்தர் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த சுந்தரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.  சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய சுந்தரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை வெட்டினார்களா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: