இளம்பெண்ணுக்கு மிரட்டல் வாலிபருக்கு தர்ம அடி

அண்ணாநகர்: அமைந்தகரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அதே பகுதியில் உள்ள டீக்கடையில் கேரளாவை சேர்ந்த ஹரிதாஸ் (38), என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த டீக்கடைக்கு இளம்பெண் தினசரி வந்து சென்றபோது ஹரிதாசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை சாதகமாக பயன்படுத்திய ஹரிதாஸ், அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இளம்பெண் அதை ஏற்கவில்லை. ஆனாலும், ஹரிதாஸ் தொடர்ந்து காதலிக்க கட்டாயப்படுத்தி உள்ளார். இதுபற்றி இளம்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் ஹரிதாசை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஹரிதாஸ், நேற்று முன்தினம் இளம்பெண்ணை வழிமறித்து மிரட்டல் விடுத்துள்ளார். தகவலறிந்து வந்த இளம்பெண்ணின் உறவினர்கள், ஹரிதாசை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து, அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Advertising
Advertising

Related Stories: