இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று ஒரு மாதத்திற்கு பிறகு கத்தோலிக்க பள்ளிகள் திறப்பு

இலங்கை: இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று ஒரு மாதமாகும் நிலையில் அந்நாட்டில் கத்தோலிக்க பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தின் போது தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனையடுத்து அந்த நாட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

Advertising
Advertising

பின்னர் அந்த நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட போது பாதுகாப்பு காரணமாக கத்தோலிக்க பள்ளிகளின் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று ஒரு மாதம் ஆகும் நிலையில் அங்கு கத்தோலிக்க பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. புத்தக பைகள் சோதனை செய்யப்பட்ட பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: