×

நியூசிலாந்து நாட்டில் முதல் முறையாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

நியூசிலாந்த்: நியூசிலாந்து நாட்டில் முதல் முறையாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்ட நிலையில், 51 பேரை கொலை செய்தது, 40 பேரை கொலை செய்ய முயன்றதாகவும், தீவிர வாத செயலில் ஈடுப்பட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நியூசிலாந்தில் தீவிரவாத தடுப்பு சட்டம் கடந்த 2002ஆம் ஆண்டு தான் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அந்த நாட்டில் முதல் முறையாக இந்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகே அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : New Zealand , New Zealand,case,Prevention, Terrorism Act , first time
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.