×

பிரிட்டனில் தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி போராட்டம்

பிரிட்டன்: பிரிட்டனில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வலதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 23-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அந்நாட்டில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி போராட்டம் நட்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வலதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை வீசி எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனால் பிரச்சாரம் நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகளில் மில்ஷேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் விற்பதை தடுக்க வேண்டும் என்று அந்நாட்டு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


Tags : fight ,Millschukes ,election campaign ,Britain , Millschukes,fight,candidates,election campaign, Britain
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...