சோகைல் முகமது வெளியுறவு செயலாளராக பொறுப்பேற்ற நிலையில் இந்தியாவுக்கான புதிய தூதராக மொயின் உல் ஹக் பொறுப்பேற்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் நேற்று இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 24 நாடுகளின் புதிய தூதர்களுக்கான நியமன ஆணைக்கு ஒப்புதல் வழங்கினார். இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக மொயின் உல் ஹக் என்பவரை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை நியமித்துள்ளது. மொயின், பிரான்ஸ் நாட்டிற்கான தூதராக பணியாற்றி வந்தார். முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நெறிமுறைகளின் தலைவராகவும் பணியாற்றினார். இந்தியாவுக்கான தூதராக ஏற்கனவே பதவி வகித்த சோகைல் முகமது, பாகிஸ்தானின் புதிய வெளியுறவு செயலாளராக பொறுப்பேற்றார்.

அந்த பதவி காலியாக இருந்ததையடுத்து மொயின் இந்திய தூதராக பொறுப்பேற்றுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி கூறுகையில், இந்தியா மிக முக்கியமான நாடாகும். அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னரே மொயின் உல் ஹக்கிற்கு பொறுப்பு வழங்கியுள்ளோம். டெல்லிக்கு மொயினை அனுப்பி வைக்க உள்ளோம். அவர் சிறந்த முறையில் பாகிஸ்தானின் கருத்துகளை வெளிப்படுத்துவார் என நம்புகிறோம் என்று கூறினார்.

Related Stories: