×

தலைமை செயலருடன் ஆலோசனை: அவகாசம் கோரி ட்விட்டர் நிறுவனம் மனு

சென்னை: இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக தலைமை செயலருடன் ஆலோசனை நடத்த கூடுதல் அவகாசம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் மனு அளித்துள்ளார். ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தலைமை செயலருக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Chief Executive ,Twitter Company , Advice, time, Twitter company, petition
× RELATED இந்தியன் வங்கியின் 2023-24ம் ஆண்டுக்கான...