கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பு

கனடா: கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. கனடா நாட்டின் மான்ட்ரியல் நகரில் 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு நிறுவனங்கள், தலைசிறந்த பொறியாளர்கள், ரோபோ வடிவமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.

அதில் அன்றாட பணிகளில் உதவும் பல்வேறு ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பளுதூக்கும் ரோபோ, சர்க்கர நாற்காலிகளில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் படிகளில் ஏற உதவும் ரோபோ, நான்கு கால்களையுடைய சுமை தூக்கும் ரோபோ ஆகியவை காண்போரை வியப்பில் ஆழ்த்தின. இதனை காண பல்வேறு நாடுகளில் இருந்து பொது மக்கள் வந்துள்ளனர். பார்வையாளர் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: