புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் பக்கவாட்டில் ஏறிய இளைஞரால் புதிய பார்வையாளர்களுக்கு தடை

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையமான ஈபிள் கோபுரத்தில் ஏறிய நபர், கடும் முயற்சிக்கு பின் இறக்கப்பட்டதால் 6 மணி நேரமாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.  பிரான்ஸின் பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தில் அனுமதிக்கப்பட்ட தடத்தில் மட்டுமே சுற்றுலா பயணிகள் சென்று வர வேண்டும். ஆனால் நேற்று திடீரென்று மர்மநபர் ஒருவர் ஆங்காங்கு இருந்த கம்பிகளை பிடித்து மேலேறினார். இதனால் அச்சம் அடைந்த அதிகாரிகள் ஈபிள் கோபுரத்தில் இருந்தவர்களை அவசரமாக வெளியேற்றினர். மேலும் புதிய பார்வையாளர்களுக்கும் தடை விதித்தனர். இதையடுத்து குறிப்பிட்ட நபரை 6 மணி நேரம் போராடி போலீசார் கைது செய்தனர். அவர் யார் என்பதை குறிப்பிடாத போலீசார், உயர்ந்த கட்டிடத்தின் மேல் ஏறும் ஆர்வத்தில் அவர் ஈபிள் கோபுரத்தின் மேல் ஏறியதாக தெரிவித்தனர்.

Related Stories: