×

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும்: அருண் ஜெட்லி

டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் துல்லியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவை தொடர்பாக எங்களில் சிலரிடையே சச்சரவு ஏற்படலாம். ஆனால், எண்ணற்ற கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஒரே மாதிரி இருக்கும்போது, தேர்தல் முடிவுகளும் அதே மாதிரிதான் இருக்கும். இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எந்த பங்கும் இருக்காது.

பிரதமர் மோடிக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல், 2014-ம் ஆண்டு தேர்தலிலும் எடுபடவில்லை. இந்த தேர்தலிலும் எடுபடவில்லை. தலைவர்கள் தகுதி அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி குடும்பம் ஒரு சுமையாக ஆகிவிட்டது. இனிமேல், அந்த குடும்பம், காங்கிரசுக்கு ஒரு சொத்தாக இருக்காது. சாதி அல்லது குடும்ப பின்னணி அடிப்படையில் அல்ல. பிரதமர் மோடியின் செயல்பாடு சார்ந்த விஷயங்கள், வாக்காளர்களிடம் ஆதரவை பெற்றுள்ளன. அவர்கள் எதிர்க்கட்சி கூட்டணியை நம்ப தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Arun Jaitley , Arun Jaitley, polls, Lok Sabha polls,
× RELATED மகளிர் பிரிமியர் லீக் டி20 ஆர்சிபி அணி...