×

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்கு உள்ளானது. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ரயில் நிலையம் அருகில் இன்று சரக்கு ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தினால் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் விபத்திற்கு உள்ளானது. இதனால் சென்னையிலிருந்து காட்பாடி மார்க்கமாக செல்லும் மங்களூர், லால்பார்க் போன்ற விரைவு ரயில்கள் தாமதமாக செல்கிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.


Tags : Arakkonam , Arranged, freight train, accident
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...