திருமாவளவன் உறுதி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த விட மாட்டோம்

சிதம்பரம்:  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் அளித்த பேட்டி:

கருத்து கணிப்புகளில் எனக்கு நம்பிக்கையில்லை. தமிழகம், புதுவையில் வேலூர் தவிர 39 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் ஒட்டு மொத்த பாலைவனமாகிவிடும். அதனால் அத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம். திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினரிடம் கலந்து பேசி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Related Stories: