குழந்தை விற்பனை வழக்கு நர்ஸ் தம்பியை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு

நாமக்கல்: குழந்தை விற்பனை வழக்கில் சரணடைந்த நர்ஸ் அமுதவள்ளியின் தம்பியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வந்த குழந்தைகள் விற்பனை தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் நர்ஸ் அமுதவள்ளி, பெங்களூருவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ரேகா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த நர்ஸ் அமுதவள்ளியின் தம்பி நந்தகுமார்(42), திருச்சி நீதிமன்றத்தில் கடந்த 16ம் தேதி சரணடைந்தார். இதையடுத்து, அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நேற்று நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் பிருந்தா மனு தாக்கல் செய்தார். அதில், திருச்சியில் சரணடைந்த நந்தகுமாரிடம் 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார். இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Related Stories: