கேரம் வீரர் ‘சீனியர்’ ராதாகிருஷ்ணன் மரணம்

சென்னை: முன்னாள் சர்வதேச கேரம் வீரர் கே. ராதாகிருஷணன் (61). ‘சீனியர்’ ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்ட இவர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இவர் இந்தியாவுக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். 1996ல் நடைபெற்ற அமெரிக்க ஓபன் கேரம் போட்டியின் பைனலில் விளையாடி 2ம் இடம் பிடித்தார்.

தமிழ்நாட்டுக்காக பலமுறை தேசிய சாம்பியன் பட்டங்களை  வென்றுள்ளார். சென்னையை சேர்ந்த இவர் மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மறைவுக்கு சென்னை மாவட்ட கேரம்  சங்க தலைவர் ரவிகுமார் டேவிட் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

× RELATED பீகாரில் மூளைக்காய்ச்சலால்...