மகளிர் ஹாக்கி தென் கொரியாவை வீழ்த்தியது இந்தியா

ஜின்சியான்: தென் கொரிய அணியுடனான மகளிர் ஹாக்கி முதல் டெஸ்டில், இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. தென் கொரியா சென்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜின்சியானில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய வீராங்கனை லால்ரேம்சியாமி 20வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார்.
 
இதைத் தொடர்ந்து 40வது நிமிடத்தில் நவ்நீத் கவுர் கோல் அடிக்க, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. பதில் தாக்குதல் நடத்திய தென் கொரிய அணிக்கு ஷின் ஹைஜியாங் 48வது நிமிடத்தில் கோல் போட்டு நம்பிக்கை அளித்தார். மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால், ஆட்ட நேர முடிவில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நாளை நடைபெறுகிறது.

Tags : hockey defeat ,South Korea , Women's hockey India defeated South Korea
× RELATED செல்லுலாய்ட் பெண்கள்