×

போர்க்கப்பல் பயிற்சி மூலம் ஈரானை எச்சரித்த அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அரபிக்கடலில் போர்க்கப்பல்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா ஈரானுக்கு எச்சரித்துள்ளதாக கருதப்படுகிறது. ஈரானுடன் செய்து கொண்ட 2015ம் ஆண்டு அணு ஆயுத சோதனையை கைவிட்டால் சலுகைகளை அளிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்தாண்டு அறிவித்தார். இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்தது. மேலும், அந்நாட்டிடம் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் எரிபொருள் வாங்கவும் தடை விதித்தது. இதனால் ேகாபம் அடைந்த ஈரான் தாக்குதலுக்கு தயாரானது.

ஈரானை தன் வழிக்கு கொண்டு வரும் வகையில் விமானம் தாங்கி போர் கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பிய அமெரிக்கா அவ்வப்போது கூட்டு பயிற்சிகளை நடத்தி வருகிறது. ஈரான் மூலம் அப்பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்ற நோக்கத்தில் இப்படி செய்வதாக அமெரிக்கா கூறுகிறது. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்காவுடன் போரிட விரும்பினால் ஈரானின் கதை முடிந்துவிடும் என்று டிரம்ப் டிவிட்டரில் எச்சரித்து பதிவிட்டார். இந்நிலையில், அரபிக்கடலில் போர்க்கப்பல்கள்  2 நாட்கள் கூட்டு பயிற்சி நடத்தியது தொடர்பான வீடியோவை அமெரிக்க கப்பற்படை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மெக்கா அருகே பாய்ந்துவந்த ஏவுகணைகளை வீழ்த்தியது சவுதி
சவுதி அரேபியாவின் மெக்காவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள தயிப், ஜெட்டோ நோக்கி நேற்று ஏவுகணைகள் பறந்து வந்தன. இவற்றை அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும், அடுத்தடுத்து தாக்குதல் நடைபெறக் கூடுமோ என்ற அச்சம் நிலவுவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. ஈரானுடனான போரை விரும்பவில்லை என்றும் தங்களை பாதுகாத்து கொள்ள தயாராக இருப்பதாகவும் சவுதி அரேபியா அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளது. ஏவுகணை தாக்குதலின் பின்னணியில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : America ,Iran , Through wartime training America warned Iran
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல்...