தஜிகிஸ்தான் சிறையில் கலவரம் ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட 32 பேர் பலி

துஷான்பே: தஜிகிஸ்தான் நாட்டு சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 24 ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட 32 பேர் பலியாகினர். தஜிகிஸ்தான் நாட்டில் வாக்தாதில் சிறைச்சாலை உள்ளது. இங்கு ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட பல கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கைதிகளுக்கு இடையே நேற்று முன்தினம் திடீரென தகராறு ஏற்பட்டு, கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில், சிறைக் காவலர்கள் 3 பேர் குத்திக் கொல்லப்பட்டனர். பின்னர் சிறைக் கைதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் கலவரக்காரர்கள், சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.

 தகவலறிந்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர், கலவரத்தை அடக்க முயன்றனர்.

முயற்சி பலன் அளிக்காததால் பதிலடி தாக்குதலில் இறங்கினர். இதில் ஐஎஸ் தீவிரவாதிகள் 24 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 25 பேரை கைது செய்து, பிணையக் கைதிகளை விடுவித்தனர். கலவரத்தை வழி நடத்தியவர்களில் ஒருவர் 20 வயது வாலிபர். அவரது தந்தை தஜிகிஸ்தான் சிறப்பு படையில் பணியாற்றி பின்னர் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் இயக்கத்துக்கு தலைமை தாங்கி வழி நடத்தியவர். இவர் 2017ம் ஆண்டு செப்டம்பரில் சுட்டுக்கொல்லப்பட்டார் என தஜிகிஸ்தான் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: