தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பிரமாண்ட பெருமாள் சிலைக்காக தற்காலிக மண்பால பணி தீவிரம்

ஓசூர்: தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால், பிரமாண்ட பெருமாள் சிலை கடந்து செல்ல வசதியாக ஆற்றின் குறுக்கே தற்காலிக மண்பாலம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா கொரக்கோட்டையில் செதுக்கப்பட்ட 350 டன் எடையுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலை, ஒசூர் அருகே பேரண்டப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடும் தென்பெண்ணையாற்றில், சிலை கடந்து செல்ல வசதியாக தற்காலிக மண்பாலம் அமைக்கும் பணி மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.

அணைக்கு 400 கனஅடி முதல் 508 கனஅடி வரை தண்ணீர் வந்ததால், பணிகள் நடைபெறவில்லை. தற்போது 293 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இதனையடுத்து, தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாலம் அமைக்கப்பட்டு பொறியாளர்கள் ஆய்வு செய்த பின், சிலை ஆற்றை கடக்க உள்ளது. இதனிடையே, கடந்த 12 நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பெருமாள் சிலையை காண, ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

Related Stories: